குர்ஆன் 17:106 — இஸ்ரவேலின் சந்ததியினர்
ஒரே தடவையில் இது அனைத்தையும் நாம் கீழே இறக்கிய போதிலும், மனிதர்களுக்கு ஒரு நீண்ட காலம் நீர் இதனைப் படித்துக் காட்டுவதற்கு ஏற்ப, மெதுவாக நாம் வெளிப்படுத்திய ஒரு குர்ஆன்.
[17:105] சத்தியம் நிறைந்ததாக, இதனை நாம் இறக்கினோம், மேலும் சத்தியத்துடனே இது இறங்கி வந்தது. நற்செய்தியைக் கொண்டு செல்லும் ஒருவராகவும், அத்துடன் எச்சரிப்பவராகவுமே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை.
[17:107] “இதில் நம்பிக்கை கொள்ளுங்கள், அல்லது இதில் நம்பிக்கை கொள்ளாதிருங்கள்,” என்று பிரகடனம் செய்வீராக. முந்திய வேதங்களிலிருந்து அறிவைப் பெற்றவர்கள், அவர்களுக்கு இது ஓதிக்காட்டப்படும் போது, அவர்கள் சிரம் பணிந்தவர்களாக, அவர்களுடைய முகவாய்க் கட்டைகளின் மீது விழுகின்றனர்.