குர்ஆன் 17:107 — இஸ்ரவேலின் சந்ததியினர்
“இதில் நம்பிக்கை கொள்ளுங்கள், அல்லது இதில் நம்பிக்கை கொள்ளாதிருங்கள்,” என்று பிரகடனம் செய்வீராக. முந்திய வேதங்களிலிருந்து அறிவைப் பெற்றவர்கள், அவர்களுக்கு இது ஓதிக்காட்டப்படும் போது, அவர்கள் சிரம் பணிந்தவர்களாக, அவர்களுடைய முகவாய்க் கட்டைகளின் மீது விழுகின்றனர்.
[17:106] ஒரே தடவையில் இது அனைத்தையும் நாம் கீழே இறக்கிய போதிலும், மனிதர்களுக்கு ஒரு நீண்ட காலம் நீர் இதனைப் படித்துக் காட்டுவதற்கு ஏற்ப, மெதுவாக நாம் வெளிப்படுத்திய ஒரு குர்ஆன்.
[17:108] அவர்கள், “எங்கள் இரட்சகர் துதிப்பிற்குரியவர். இது எங்கள் இரட்சகரின் முன்னறிவிப்பைப் பூர்த்தி செய்கின்றது” என்று கூறுவார்கள்.