Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:33 — இஸ்ரவேலின் சந்ததியினர்

நீதியின் பாதையிலேயே தவிர-எந்த ஒரு மனிதரையும் நீங்கள் கொலை செய்ய வேண்டாம்-ஏனெனில் கடவுள் உயிர்களைப் புனிதமானதாக ஆக்கியிருக்கின்றார். அநீத மாக ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால், அப்போது நாம் அவருடைய வாரிசிற்கு நீதியை நிறைவேற்றும் அதிகாரத்தைத் தருகின்றோம். இவ்வாறாக, கொலைக்குப் பழி தீர்ப்பதில் வரம்புகளை அவர் மீற வேண்டாம், அவர் உதவி செய்யப்பட்டவராக இருப்பார்.

[17:32] நீங்கள் விபச்சாரம் செய்ய வேண்டாம்; அது மிகப்பெரியதொரு பாவம், மேலும் கெட்டதொரு நடத்தையும் ஆகும்.

[17:34] அநாதைகளின் பணத்தை அவர்கள் பக்கு வத்தை அடையும் வரை அவர்களுடைய சொந்த நலனிற்காகவே தவிர, நீங்கள் தொட வேண்டாம். உங்களுடைய உடன்படிக்கைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும், ஏனெனில் ஓர் உடன்படிக்கை என்பது மிகப்பெரிய ஒரு பொறுப்பு ஆகும்.