Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:34 — இஸ்ரவேலின் சந்ததியினர்

وَلا تَقرَبوا مالَ اليَتيمِ إِلّا بِالَّتى هِىَ أَحسَنُ حَتّىٰ يَبلُغَ أَشُدَّهُ ۚ وَأَوفوا بِالعَهدِ ۖ إِنَّ العَهدَ كانَ مَسـٔولًا

அநாதைகளின் பணத்தை அவர்கள் பக்கு வத்தை அடையும் வரை அவர்களுடைய சொந்த நலனிற்காகவே தவிர, நீங்கள் தொட வேண்டாம். உங்களுடைய உடன்படிக்கைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும், ஏனெனில் ஓர் உடன்படிக்கை என்பது மிகப்பெரிய ஒரு பொறுப்பு ஆகும்.

[17:33] நீதியின் பாதையிலேயே தவிர-எந்த ஒரு மனிதரையும் நீங்கள் கொலை செய்ய வேண்டாம்-ஏனெனில் கடவுள் உயிர்களைப் புனிதமானதாக ஆக்கியிருக்கின்றார். அநீத மாக ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால், அப்போது நாம் அவருடைய வாரிசிற்கு நீதியை நிறைவேற்றும் அதிகாரத்தைத் தருகின்றோம். இவ்வாறாக, கொலைக்குப் பழி தீர்ப்பதில் வரம்புகளை அவர் மீற வேண்டாம், அவர் உதவி செய்யப்பட்டவராக இருப்பார்.

[17:35] நீங்கள் வணிகம் செய்யும்போது அளவை நிறைவாகக் கொடுக்கவும், மேலும் நியாயமாக எடைபோடவும் வேண்டும். இதுவே மேலானதும் நன்னெறி மிகுந்ததும் ஆகும்.