குர்ஆன் 17:35 — இஸ்ரவேலின் சந்ததியினர்
நீங்கள் வணிகம் செய்யும்போது அளவை நிறைவாகக் கொடுக்கவும், மேலும் நியாயமாக எடைபோடவும் வேண்டும். இதுவே மேலானதும் நன்னெறி மிகுந்ததும் ஆகும்.
[17:34] அநாதைகளின் பணத்தை அவர்கள் பக்கு வத்தை அடையும் வரை அவர்களுடைய சொந்த நலனிற்காகவே தவிர, நீங்கள் தொட வேண்டாம். உங்களுடைய உடன்படிக்கைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும், ஏனெனில் ஓர் உடன்படிக்கை என்பது மிகப்பெரிய ஒரு பொறுப்பு ஆகும்.
[17:36] உங்களுக்காக நீங்களே சரிபார்த்துக் கொண்டாலே அன்றி, எந்தத் தகவலையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். நான் உங்களுக்குக் கேட்கும் திறனையும், கண் பார்வையையும், மேலும் மூளையையும் வழங்கியுள்ளேன், மேலும் அதனைப் பயன் படுத்துவதற்கு நீங்கள் பொறுப்பாவீர்கள்.