குர்ஆன் 17:82 — இஸ்ரவேலின் சந்ததியினர்
நம்பிக்கை கொண்டோருக்கு நிவாரணத்தையும் மற்றும் கருணையையும் இந்தக் குர்ஆனில் நாம் இறக்கி அனுப்புகின்றோம். அதே சமயம், வரம்பு மீறுபவர்களின் அக்கிரமத்தைத்தான் இது அதிகரிக்கின்றது.
[17:81] “சத்தியம் வென்றுவிட்டது, மேலும் அசத்தியம் மறைந்துவிட்டது; தவிர்த்துவிட முடியாதவாறு அசத்தியம் மறைந்தே போகும்,” என்று பிரகடனப்படுத்துவீராக.
[17:83] மனிதனுக்கு நாம் அருள்பாலிக்கும்போது, அவன் வெவ்வேறு எண்ணங்களில் மூழ்கியவனாகவும், மேலும் கவனமற்றவனாகவும் ஆகிவிடு கின்றான். ஆனால் துன்பம் அவனைத் தாக்கும் போது, அவன் மனச் சோர்வடைந்தவனாக மாறிவிடுகின்றான்.