குர்ஆன் 17:83 — இஸ்ரவேலின் சந்ததியினர்
மனிதனுக்கு நாம் அருள்பாலிக்கும்போது, அவன் வெவ்வேறு எண்ணங்களில் மூழ்கியவனாகவும், மேலும் கவனமற்றவனாகவும் ஆகிவிடு கின்றான். ஆனால் துன்பம் அவனைத் தாக்கும் போது, அவன் மனச் சோர்வடைந்தவனாக மாறிவிடுகின்றான்.
[17:82] நம்பிக்கை கொண்டோருக்கு நிவாரணத்தையும் மற்றும் கருணையையும் இந்தக் குர்ஆனில் நாம் இறக்கி அனுப்புகின்றோம். அதே சமயம், வரம்பு மீறுபவர்களின் அக்கிரமத்தைத்தான் இது அதிகரிக்கின்றது.
[17:84] “ஒவ்வொருவரும் தனது நம்பிக்கைக்கு ஏற்பவே செயல்படுகின்றார், மேலும் சரியான பாதையில் வழிநடத்தப்பட்டவர் எவர் என்பதை உங்கள் இரட்சகர் நன்கறிவார்” என்று கூறுவீராக.