குர்ஆன் 17:84 — இஸ்ரவேலின் சந்ததியினர்
“ஒவ்வொருவரும் தனது நம்பிக்கைக்கு ஏற்பவே செயல்படுகின்றார், மேலும் சரியான பாதையில் வழிநடத்தப்பட்டவர் எவர் என்பதை உங்கள் இரட்சகர் நன்கறிவார்” என்று கூறுவீராக.
[17:83] மனிதனுக்கு நாம் அருள்பாலிக்கும்போது, அவன் வெவ்வேறு எண்ணங்களில் மூழ்கியவனாகவும், மேலும் கவனமற்றவனாகவும் ஆகிவிடு கின்றான். ஆனால் துன்பம் அவனைத் தாக்கும் போது, அவன் மனச் சோர்வடைந்தவனாக மாறிவிடுகின்றான்.
[17:85] வெளிப்பாடுகளைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். கூறும், “ இந்த வெளிப்பாடு என் இரட்சகரிடமிருந்து வருகின்றது. உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவு சொற்ப மேயாகும்.”