குர்ஆன் 17:94 — இஸ்ரவேலின் சந்ததியினர்
வழிகாட்டல் அவர்களிடம் வந்தபோது நம்பிக்கை கொள்வதிலிருந்து மனிதர்களைத் தடுத்தது என்னவென்றால், “ ஒரு மனிதரைத்தான் கடவுள் தூதராக அனுப்பினாரா?” என்று அவர்கள் கூறுவது தான்.
[17:93] “அல்லது ஆடம்பரமானதோர் மாளிகையை நீர் சொந்தமாகக் கொண்டிருந்தாலன்றி, அல்லது வானத்தினுள் நீர் ஏறிச் சென்றாலன்றி. அவ்வாறு நீர் ஏறிய போதிலும், நாங்கள் படிக்கக் கூடிய ஒரு புத்தகத்தை நீர் கொண்டு வந்தாலன்றி நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.” * “என் இரட்சகர் துதிப்பிற்குரியவர். நான் ஒரு மனிதத் தூதர் என்பதை விட அதிகமாக எதுவும் ஆவேனா?” என்று கூறுவீராக.
[17:95] “வானவர்கள் வசிக்கக் கூடியதாக பூமி இருந் திருந்தால், வானவரான ஒரு தூதரை விண்ணி லிருந்து நாம் அவர்களுக்கு இறக்கி அனுப்பி யிருப்போம்” என்று கூறுவீராக.