குர்ஆன் 18:106 — குகை
அவர்களுடைய நம்பிக்கையின்மையின் பிரதிபலனாகவும், மேலும் என்னுடைய வெளிப் பாடுகளையும் மற்றும் என்னுடைய தூதர் களையும் பரிகாசம் செய்து கொண்டிருந்த தற்காகவும், அவர்களுக்குரிய நியாயமான கூலி நரகமேயாகும்.
[18:105] இத்தகையவர்கள் தான் தங்கள் இரட்சகருடைய வெளிப்பாடுகளையும் மேலும் அவரைச் சந்திப்பதையும் நம்பமறுத்தவர்கள். ஆகையால், அவர்களுடைய காரியங்கள் வீணாக உள்ளன; மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், அவற்றிற்கு மதிப்பு எதுவும் இருக்காது.
[18:107] நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களுடைய தங்குமிடமாக, பேரானந்தமயமான சுவனத்திற்குத் தகுதியாகி விட்டார்கள்.