குர்ஆன் 18:63 — குகை
அவர், “வழியில் அந்தப் பாறையின் அருகே நாம் அமர்ந்தது நினைவிருக்கின்றதா? நான் மீனின் மீது கவனம் செலுத்தவில்லை. சாத்தான் அதனை நான் மறக்கும்படி செய்து விட்டான், மேலும் அதிசயமாக, நதிக்குள் மீண்டும் செல்லும் தனது வழியை அது கண்டு கொண்டது”என்று கூறினார்.
[18:62] அவ்விடத்தை அவர்கள் கடந்து விட்ட பின்னர், அவர் தன் சேவகரிடம், “நாம் மதிய உணவை எடுத்துக் கொள்வோம். இந்தப் பயணம் அனைத்தும் நம்மை முற்றிலும் களைப்படைய செய்து விட்டது” என்று கூறினார்.
[18:64] (மோஸஸ்), “அதுதான் நாம் தேடிக் கொண்டிருந்த இடமாகும்” என்று கூறினார். அவர்கள் தங்கள் காலடிச் சுவடுகளைத் தேடியவாறு திரும்பிச் சென்றனர்.