குர்ஆன் 18:62 — குகை
அவ்விடத்தை அவர்கள் கடந்து விட்ட பின்னர், அவர் தன் சேவகரிடம், “நாம் மதிய உணவை எடுத்துக் கொள்வோம். இந்தப் பயணம் அனைத்தும் நம்மை முற்றிலும் களைப்படைய செய்து விட்டது” என்று கூறினார்.
[18:61] இரு நதிகளும் சந்தித்துக் கொள்ளும் இடத்தை அவர்கள் அடைந்தபோது, அவர்கள் தங்களுடைய மீனை மறந்துவிட்டனர், மேலும் அது நதிக்குள் மீண்டும் செல்லும் தனது வழியைக் கண்டு கொண்டு, இரகசியமாக நழுவிவிட்டது.
[18:63] அவர், “வழியில் அந்தப் பாறையின் அருகே நாம் அமர்ந்தது நினைவிருக்கின்றதா? நான் மீனின் மீது கவனம் செலுத்தவில்லை. சாத்தான் அதனை நான் மறக்கும்படி செய்து விட்டான், மேலும் அதிசயமாக, நதிக்குள் மீண்டும் செல்லும் தனது வழியை அது கண்டு கொண்டது”என்று கூறினார்.