குர்ஆன் 18:70 — குகை
قالَ فَإِنِ اتَّبَعتَنى فَلا تَسـَٔلنى عَن شَيءٍ حَتّىٰ أُحدِثَ لَكَ مِنهُ ذِكرًا
அவர், “நீர் என்னைப் பின்தொடர்ந்தால், பின்னர் அதனைப் பற்றி உமக்குக் கூற நான் முடிவு செய்தாலன்றி, எந்த ஒன்றைப் பற்றியும் என்னிடம் நீர் கேட்காதிருக்க வேண்டும்” என்று கூறினார்.
[18:69] அவர், “கடவுள் நாடினால், என்னைப் பொறுமையுடையவராக நீர் காண்பீர். நீர் எனக்கிடும் எந்தக் கட்டளைக்கும் நான் கீழ்ப்படியாதிருக்க மாட்டேன்” என்று கூறினார்.
[18:71] எனவே அவர்கள் சென்றனர். அவர்கள் ஒரு கப்பலில் ஏறியபோது, அவர் அதில் துளை ஒன்றை போட்டார். அவர், “அதிலுள்ள மக்களை மூழ்கடிக்கவா அதில் நீர் ஒரு துளையை போட்டீர்? நீர் பயங்கரமான ஒன்றைச் செய்து விட்டீர்”என்று கூறினார்.