குர்ஆன் 18:74 — குகை
எனவே அவர்கள் சென்றனர். அவர்கள் ஒரு சிறுவனைச் சந்தித்தபோது, அவர் அவனைக் கொன்றுவிட்டார். அவர் “மற்றொரு ஆன்மாவைக் கொலை செய்திராத இத்தகையதொரு குற்றமற்ற ஆன்மாவை நீர் ஏன் கொலை செய்தீர்? கொடூரமான ஒன்றை நீர் செய்து விட்டீர்” என்று கூறினார்.
[18:73] அவர், “நான் வருந்துகின்றேன். என்னுடைய மறதிக்காக என்னைத் தண்டித்து விடாதீர்; என்னிடம் மிகக் கடுமையாக இருக்காதீர்” என்று கூறினார்.
[18:75] அவர், “என்னுடன் பொறுமையாயிருக்க உம்மால் இயலாது என நான் கூறவில்லையா?” என்று கூறினார்.