குர்ஆன் 18:77 — குகை
எனவே அவர்கள் சென்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவர்கள் அடைந்தபோது, அவர்கள் அம்மக்களிடம் உணவு கேட்டனர், ஆனால் அவர்களை உபசரிக்க அவர்கள் மறுத்து விட்டனர். விரைவில், அவர்கள் விழுந்து விட இருக்கும் ஒரு மதிற்சுவரைக் கண்டனர், அவர் அதனைச் சரி செய்தார். அவர், “அதற்கு ஒரு கூலியை நீர் கேட்டிருக்கலாம்!” என்று கூறினார்.
[18:76] அவர், “வேறு எதையேனும் பற்றி நான் உம்மிடம் கேட்டால், பின்னர் நீர் என்னை உம்மோடு வைத்திருக்க வேண்டாம். என்னிடமிருந்து போதுமான அளவு மன்னிப்புக் கோருதலை நீர் கண்டு விட்டீர்” என்று கூறினார்.
[18:78] அவர் கூறினார், “இப்போது நாம் பிரிந்துவிட வேண்டியது தான். ஆனால் உம்மால் சகித்துக் கொண்டிருக்க முடியாத ஒவ்வொன்றைப் பற்றியும் நான் உமக்கு விளக்குவேன்”.