குர்ஆன் 18:78 — குகை
அவர் கூறினார், “இப்போது நாம் பிரிந்துவிட வேண்டியது தான். ஆனால் உம்மால் சகித்துக் கொண்டிருக்க முடியாத ஒவ்வொன்றைப் பற்றியும் நான் உமக்கு விளக்குவேன்”.
[18:77] எனவே அவர்கள் சென்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவர்கள் அடைந்தபோது, அவர்கள் அம்மக்களிடம் உணவு கேட்டனர், ஆனால் அவர்களை உபசரிக்க அவர்கள் மறுத்து விட்டனர். விரைவில், அவர்கள் விழுந்து விட இருக்கும் ஒரு மதிற்சுவரைக் கண்டனர், அவர் அதனைச் சரி செய்தார். அவர், “அதற்கு ஒரு கூலியை நீர் கேட்டிருக்கலாம்!” என்று கூறினார்.
[18:79] “அந்தக் கப்பலைப் பொறுத்தவரை, அது ஏழை மீனவர்களுக்குரியதாக இருந்தது, எனினும், அதனைப் பழுதாக்க நான் விரும்பினேன். அவர்களுக்குப் பின்னால் பலவந்தமாக ஒவ்வொரு கப்பலையும் பறிமுதல் செய்கின்ற ஓர் அரசன் வந்து கொண்டிருந்தான்.