குர்ஆன் 19:31 — மேரி
“நான் செல்லுமிடமெல்லாம் அருள்பாலிக்கப் பட்டவராக என்னை அவர் ஆக்கியுள்ளார், மேலும் நான் வாழும் காலமெல்லாம் என்னைத் தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிறைவேற்றக் கட்டளையிட்டுள்ளார்.
[19:30] (அந்தக் குழந்தை பேசியது மேலும்) கூறியது, “நான் கடவுள்-ன் ஓர் அடியார் ஆவேன். அவர் எனக்கு வேதத்தைத் தந்துள்ளார், மேலும் என்னை ஒரு வேதம் வழங்கப்பட்டவராக நியமித்துள்ளார்.
[19:32] “நான் என் தாயைக் கண்ணியப்படுத்த வேண்டியவன்; கீழ்ப்படியாததொரு கலகக் காரனாக என்னை அவர் ஆக்கவில்லை.