குர்ஆன் 19:34 — மேரி
அவர் தான் இயேசு ஆவார், மேரியின் மகனாவார், மேலும் அவர்கள் தொடர்ந்து சந்தேகித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத் தைப் பற்றிய உண்மை இதுவேயாகும்.
[19:33] “மேலும் நான் பிறந்த அந்நாளிலும், நான் இறக்கும் அந்நாளிலும், மேலும் நான் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்நாளிலும் என் மீது அமைதி நிலவும்.”
[19:35] கடவுள் ஒரு மகனைப் பெற்றெடுப்பதென்பது அவருக்கு பொருத்தமானதல்ல, அவர் துதிப்பிற்குரியவர். எந்த ஒன்றையும் செய்து முடிக்க அவர் அதனை, “ஆகு” என்று மட்டும் கூறுவார், உடன் அது ஆகிவிடும்.