Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:54 — மேரி

மேலும் இஸ்மவேலை இந்த வேதத்தில் குறிப் பிட்டுக் கூறுவீராக. வாக்குறுதி ஒன்றினை அவர் செய்தபோதெல்லாம் அவர் உண்மை யுடையவராக இருந்தார், மேலும் அவர் ஒரு வேதம் வழங்கப்பட்ட தூதராக இருந்தார்.

[19:53] மேலும் நமது அருளிலிருந்து, அவருடைய சகோதரர் ஆரோனை ஒரு வேதம் வழங்கப் பட்டவராக, அவருக்கு அளித்தோம்.

[19:55] அவர் தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிறை வேற்றும்படித் தன் குடும்பத்தாரை ஏவுபவராக இருந்தார்; அவருடைய இரட்சகருக்கு, ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவராக அவர் இருந்தார்.