குர்ஆன் 19:96 — மேரி
நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, மிக்க அருளாளர் அவர்களை அன்பைக் கொண்டு பொழிவார்.
[19:95] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்நாளில் அவர்கள் அனைவரும் தனித்தவர்களாக அவர் முன் வருவார்கள்.
[19:97] இவ்விதமாக (குர்ஆனாகிய) இதனை நாம் நன்னெறியாளர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்காகவும், மேலும் இதனைக் கொண்டு எதிர்ப்பாளர்களை எச்சரிப்பதற்காகவும், உமது மொழியில் விவரிக்கப்பட்டதாக ஆக்கியுள்ளோம்.