குர்ஆன் 2:101 — பசுங்கன்று
இப்போது கடவுள்-இடம் இருந்து ஒரு தூதர் அவர்களிடம்* வந்துள்ளார் மேலும் அவர், அவர்களுடைய சொந்த வேதத்தையே நிரூபிக்கவும் உறுதிப்படுத்தவும் செய்த போதிலும் வேதங்களைப் பின்பற்றும் சிலர் (யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்) தங்களிடம் வேதங்கள் எதையும் ஒரு போதும் கொண்டிருக்காதவர்கள் போல், கடவுள்-ன் வேதத்தைத் தங்கள் பின்புறமாக எறிந்து விடுகின்றனர்.
[2:100] ஓர் உடன்படிக்கை செய்து அதனை நிறை வேற்றுவதாக உறுதிமொழி எடுத்துக் கொண் டால், அவர்களில் சிலர் எப்போதும் அதனை அலட்சியம் செய்கின்றார்கள், என்பது உண்மை இல்லையா? உண்மையில் அவர்களில், பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
[2:102] அவர்கள் ஸாலமனின் சாம்ராஜ்யம் சம்பந்தமாக சாத்தான்கள் கற்றுக்கொடுத்ததைப் பின் தொடர்ந்தனர், எனினும் ஸாலமன் நம்பிக்கை யற்றவராக இருக்கவில்லை, ஆனால் சாத்தான்கள் தான் நம்பிக்கையற்றவர்களாக இருந்தனர். அவர்கள் மனிதர்களுக்கு மாந்திரீகத்தையும், மேலும் பாபிலைச் சேர்ந்த ஹாரூத், மாரூத் என்ற இருவானவர்கள் மூலம் இறக்கப்பட்டவற்றையும் கற்றுக் கொடுத்தனர். அவர்கள் இருவரும் “இது ஒரு சோதனையாகும், இத்தகைய அறிவை நீங்கள் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது” என்பதைச் சுட்டிக்காட்டாமல் இப்படிப்பட்ட அறிவை வெளிப்படுத்தவில்லை. ஆனால் மக்கள், திருமணங்களை முறிப்பது போன்ற தீய சூழ்ச்சிகளுக்கு அதனைப் பயன்படுத்தினர். கடவுள்-ன் நாட்டத்திற்கு எதிராக அவர்கள் எவர் ஒருவருக்கும் ஒருபோதும் தீங்கிழைக்க இயலாது. இவ்விதமாக அவர்கள் தங்களுக்கு தீங்கு விளைவிப்பதையே கற்றுக் கொண்டனர், அவர்களுக்குப் பலன் அளிப்பதை அல்ல, மேலும் மாந்திரீகத்தைப் பயில்வோருக்கு மறுவுலகில் எந்தப் பங்கும் இல்லை என்பதை அவர்கள் முற்றிலும் அறிந்திருக்கின்றனர். அவர்கள் மட்டும் அறிந்திருந்தால், தங்கள் ஆன்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது உண்மையில் துக்ககரமானது ஆகும்.