குர்ஆன் 2:114 — பசுங்கன்று
கடவுள்-ன் பெயர் துதிக்கப்படும் மஸ்ஜிதுகளைப் புறக்கணித்து, அவற்றைப் பாழ்படுத்தத் துணை செய்பவனை விட அக்கிரமக்காரன் வேறுயார்? அச்சத்துடனேயன்றி அவர்கள் அதிலே நுழையக் கூடாது. அவர்கள் இந்த வாழ்வில் இழிவை அனுபவிப்பார்கள், மேலும் மறுவுலகில் பயங்கரமானதொரு வேதனையை அனுபவிப் பார்கள்.
[2:113] “கிறிஸ்தவர்களிடம் எந்த அடிப்படையும் இல்லை,” என்று யூதர்கள் கூறினார்கள், அதே சமயம்,” யூதர்களிடம் எந்த அடிப்படையும் இல்லை,” என்று கிறிஸ்தவர்கள் கூறினார்கள். இருப்பினும் அவர்கள் இருவரும் வேதத்தைப் படிக்கின்றார்கள். இவ்விதமானவை அறிவு இல்லாதவர்களின் கூற்றுக்களே ஆகும். மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் அவர்களுடைய தர்க்கங்கள் குறித்துக் கடவுள் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.
[2:115] கிழக்கும் மேற்கும் கடவுள்-க்கு உரியவை; எங்கே நீங்கள் சென்றாலும் கடவுள் அங்கே இருக் கின்றார். கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர்.