Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:115 — பசுங்கன்று

கிழக்கும் மேற்கும் கடவுள்-க்கு உரியவை; எங்கே நீங்கள் சென்றாலும் கடவுள் அங்கே இருக் கின்றார். கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர்.

[2:114] கடவுள்-ன் பெயர் துதிக்கப்படும் மஸ்ஜிதுகளைப் புறக்கணித்து, அவற்றைப் பாழ்படுத்தத் துணை செய்பவனை விட அக்கிரமக்காரன் வேறுயார்? அச்சத்துடனேயன்றி அவர்கள் அதிலே நுழையக் கூடாது. அவர்கள் இந்த வாழ்வில் இழிவை அனுபவிப்பார்கள், மேலும் மறுவுலகில் பயங்கரமானதொரு வேதனையை அனுபவிப் பார்கள்.

[2:116] அவர்கள், “கடவுள் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்!” என்று கூறினர். ஒரு போதும் இல்லை! அவர் துதிப்பிற்குரியவர்; வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியவை; அனைத்தும் அவருக்கு கீழ்படிந்து நடப்பவையே ஆகும்.