குர்ஆன் 2:116 — பசுங்கன்று
அவர்கள், “கடவுள் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்!” என்று கூறினர். ஒரு போதும் இல்லை! அவர் துதிப்பிற்குரியவர்; வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியவை; அனைத்தும் அவருக்கு கீழ்படிந்து நடப்பவையே ஆகும்.
[2:115] கிழக்கும் மேற்கும் கடவுள்-க்கு உரியவை; எங்கே நீங்கள் சென்றாலும் கடவுள் அங்கே இருக் கின்றார். கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர்.
[2:117] வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவர். எதையேனும் செய்து முடிக்க வேண்டு மென்றால் அவர் அதனை “ஆகு” என்று மட்டும் கூறுவார், அது ஆகிவிடும்.