குர்ஆன் 2:117 — பசுங்கன்று
வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவர். எதையேனும் செய்து முடிக்க வேண்டு மென்றால் அவர் அதனை “ஆகு” என்று மட்டும் கூறுவார், அது ஆகிவிடும்.
[2:116] அவர்கள், “கடவுள் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்!” என்று கூறினர். ஒரு போதும் இல்லை! அவர் துதிப்பிற்குரியவர்; வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியவை; அனைத்தும் அவருக்கு கீழ்படிந்து நடப்பவையே ஆகும்.
[2:118] “கடவுள் மட்டும் நம்முடன் பேசமுடிந்தால், அல்லது சில அற்புதங்கள் நம்மிடம் இறங்கி வந்தால்!” என்று அறிவில்லாதவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இது போன்ற கூற்றுக்களை கூறி இருக்கின்றனர். அவர்களுடைய மனங்கள் ஒரே மாதிரியாகவே உள்ளன. உறுதியை அடைந்துவிட்ட மக்களுக்கு நாம் அற்புதங்களை வெளிப்படுத்திக்காட்டவே செய்கின்றோம்.