குர்ஆன் 2:118 — பசுங்கன்று
“கடவுள் மட்டும் நம்முடன் பேசமுடிந்தால், அல்லது சில அற்புதங்கள் நம்மிடம் இறங்கி வந்தால்!” என்று அறிவில்லாதவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இது போன்ற கூற்றுக்களை கூறி இருக்கின்றனர். அவர்களுடைய மனங்கள் ஒரே மாதிரியாகவே உள்ளன. உறுதியை அடைந்துவிட்ட மக்களுக்கு நாம் அற்புதங்களை வெளிப்படுத்திக்காட்டவே செய்கின்றோம்.
[2:117] வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவர். எதையேனும் செய்து முடிக்க வேண்டு மென்றால் அவர் அதனை “ஆகு” என்று மட்டும் கூறுவார், அது ஆகிவிடும்.
[2:119] நற்செய்தியைக் கொண்டு செல்பவராகவும், அதே சமயம் எச்சரிப்பவராகவும் நாம் உம்மைச் சத்தியத் துடன் அனுப்பியுள்ளோம்*. நரகிற்கு உள்ளா வோருக்கு நீர் பொறுப்பாளி அல்ல.