குர்ஆன் 2:119 — பசுங்கன்று
நற்செய்தியைக் கொண்டு செல்பவராகவும், அதே சமயம் எச்சரிப்பவராகவும் நாம் உம்மைச் சத்தியத் துடன் அனுப்பியுள்ளோம்*. நரகிற்கு உள்ளா வோருக்கு நீர் பொறுப்பாளி அல்ல.
[2:118] “கடவுள் மட்டும் நம்முடன் பேசமுடிந்தால், அல்லது சில அற்புதங்கள் நம்மிடம் இறங்கி வந்தால்!” என்று அறிவில்லாதவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இது போன்ற கூற்றுக்களை கூறி இருக்கின்றனர். அவர்களுடைய மனங்கள் ஒரே மாதிரியாகவே உள்ளன. உறுதியை அடைந்துவிட்ட மக்களுக்கு நாம் அற்புதங்களை வெளிப்படுத்திக்காட்டவே செய்கின்றோம்.
[2:120] யூதர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ அவர்க ளுடைய மார்க்கத்தை நீர் பின்பற்றினாலே அன்றி உம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். “கடவுள்-ன் வழிகாட்டலே உண்மையான வழிகாட்டல் ஆகும்” என்று கூறுவீராக. நீர் பெற்றுள்ள அறிவிற்குப் பின்னரும் அவர்களுடைய விருப்பத்திற்கு நீர் இணங்கினால் கடவுள்-க்கு எதிராக உமக்கு உதவி செய்யக் கூடிய நண்பரையோ அல்லது ஆதரவாளரையோ நீர் காணமாட்டீர்.