குர்ஆன் 2:120 — பசுங்கன்று
யூதர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ அவர்க ளுடைய மார்க்கத்தை நீர் பின்பற்றினாலே அன்றி உம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். “கடவுள்-ன் வழிகாட்டலே உண்மையான வழிகாட்டல் ஆகும்” என்று கூறுவீராக. நீர் பெற்றுள்ள அறிவிற்குப் பின்னரும் அவர்களுடைய விருப்பத்திற்கு நீர் இணங்கினால் கடவுள்-க்கு எதிராக உமக்கு உதவி செய்யக் கூடிய நண்பரையோ அல்லது ஆதரவாளரையோ நீர் காணமாட்டீர்.
[2:119] நற்செய்தியைக் கொண்டு செல்பவராகவும், அதே சமயம் எச்சரிப்பவராகவும் நாம் உம்மைச் சத்தியத் துடன் அனுப்பியுள்ளோம்*. நரகிற்கு உள்ளா வோருக்கு நீர் பொறுப்பாளி அல்ல.
[2:121] எவர்கள் வேதத்தைப் பெற்று, அதனை அறிய வேண்டிய முறையில் அறிந்திருக்கின்றனரோ அவர்கள் இதில் நம்பிக்கை கொள்வார்கள் நம்ப மறுப்போரைப் பொறுத்தவரை அவர்கள் தான் நஷ்டவாளிகள்.