குர்ஆன் 2:12 — பசுங்கன்று
உண்மையில், அவர்கள் தீமை செய்பவர்கள், ஆனால் அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
[2:11] “தீமைகள் செய்யக்கூடாது” என அவர்களிடம் கூறப்படும் பொழுது, “ஆனால் நாங்கள் நன்னெறி யாளர்கள்!” என்று அவர்கள் கூறுகின்றனர்.
[2:13] “நம்பிக்கை கொண்ட மக்களைப் போல் நம்பிக்கை கொள்ளுங்கள்,” என்று அவர்களிடம் கூறப்படும் பொழுது, “மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நாங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமா?” என்று அவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் தான் மூடர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் அறிந்து கொள்வதில்லை.