குர்ஆன் 2:13 — பசுங்கன்று
“நம்பிக்கை கொண்ட மக்களைப் போல் நம்பிக்கை கொள்ளுங்கள்,” என்று அவர்களிடம் கூறப்படும் பொழுது, “மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நாங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமா?” என்று அவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் தான் மூடர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் அறிந்து கொள்வதில்லை.
[2:12] உண்மையில், அவர்கள் தீமை செய்பவர்கள், ஆனால் அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
[2:14] நம்பிக்கை கொண்டவர்களை அவர்கள் சந்திக்கும் பொழுது, “நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்” என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் தங்கள் சாத்தான்களுடன் தனித்திருக்கும் பொழுது, “நாங்கள் உங்களுடன் தான் இருக்கின்றோம்; நாங்கள் பரிகாசம் மட்டுமே செய்து கொண்டிருந்தோம்.” என்று அவர்கள் கூறுகின்றனர்.