குர்ஆன் 2:14 — பசுங்கன்று
நம்பிக்கை கொண்டவர்களை அவர்கள் சந்திக்கும் பொழுது, “நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்” என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் தங்கள் சாத்தான்களுடன் தனித்திருக்கும் பொழுது, “நாங்கள் உங்களுடன் தான் இருக்கின்றோம்; நாங்கள் பரிகாசம் மட்டுமே செய்து கொண்டிருந்தோம்.” என்று அவர்கள் கூறுகின்றனர்.
[2:13] “நம்பிக்கை கொண்ட மக்களைப் போல் நம்பிக்கை கொள்ளுங்கள்,” என்று அவர்களிடம் கூறப்படும் பொழுது, “மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நாங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமா?” என்று அவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் தான் மூடர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் அறிந்து கொள்வதில்லை.
[2:15] கடவுள் அவர்களைப் பரிகாசம் செய்கின்றார், மேலும் அவர்களுடைய வரம்பு மீறல்களில், பெருந்தவறுகள் செய்யும் வண்ணம் அவர்களை வழி நடத்துகின்றார்.