குர்ஆன் 2:122 — பசுங்கன்று
இஸ்ரவேலின் சந்ததியினரே, நான் உங்களுக்கு வழங்கிய என் சலுகையையும் மேலும் மற்ற மக்களை விட அதிகமான அருட்கொடைகளை உங்களுக்கு நான் வழங்கியதையும் நினைவில் கொள்ளுங்கள்.
[2:121] எவர்கள் வேதத்தைப் பெற்று, அதனை அறிய வேண்டிய முறையில் அறிந்திருக்கின்றனரோ அவர்கள் இதில் நம்பிக்கை கொள்வார்கள் நம்ப மறுப்போரைப் பொறுத்தவரை அவர்கள் தான் நஷ்டவாளிகள்.
[2:123] எந்த ஒரு ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவிற்கு உதவி செய்யாத, எவ்வித ஈட்டுத் தொகையும் ஏற்றுக் கொள்ளப்படாத, எந்தப் பரிந்துரையும் பயன் தராத, மேலும் எவரும் உதவி செய்யப் படாத அந்த நாள் குறித்து எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள்.