Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:166 — பசுங்கன்று

தங்களைப் பின்பற்றியவர்களை, பின்பற்றப் பட்டவர்கள்* கைவிட்டு விடுவார்கள். அவர்கள் தண்டனையைக் காண்பார்கள், மேலும் அவர்களுக்கிடையில் எல்லாத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிடும்.

[2:165] இருப்பினும், சில மனிதர்கள் கடவுள்-க்குப் போட்டியாக இணைத்தெய்வங்களை அமைத்து மேலும் அவர்களைக் கடவுள்-ஐப் போல் நேசிக் கின்றார்கள். நம்பிக்கையாளர்களோ கடவுள்-ஐ அதிகம் நேசிக்கின்றார்கள். தண்டனையைக் காணும் சமயம் வரம்பு மீறுபவர்கள் மட்டும் தங்களையே காண முடிந்தால்! அதன் பின்னர் கடவுள்-க்கு மட்டுமே அனைத்து வல்லமையும் உரியது என்றும், மேலும் கடவுள்-ன் தண்டனை அச்சமூட்டத்தக்கது என்றும் கண்டு கொள்வார்கள்.

[2:167] பின்பற்றியவர்கள், “மற்றொரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தால் அவர்கள் இப்பொழுது எங்களை கைவிட்டது போல், நாங்களும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்” என்று கூறுவார்கள். இவ்விதமாக கடவுள், அவர்களுடைய செயல்களின் விளைவுகள் துக்கத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை அவர்களுக்கு காட்டுவார். அவர்கள் ஒருபோதும் நரகில் இருந்து வெளியேற மாட்டார்கள்.