குர்ஆன் 2:17 — பசுங்கன்று
அவர்களுடைய உதாரணம் ஒரு நெருப்பை மூட்டியவர்களைப் போன்றது, பின்னர் அவர் களைச் சுற்றி, அது ஒளி சிந்தத் துவங்கும் பொழுது, கடவுள் அவர்களுடைய ஒளியை எடுத்து விடுகின்றார், பார்க்க இயலாதவர்களாக அவர்களை இருளில் விட்டுவிடுகின்றார்.
[2:16] இவர்கள்தான் வழிகாட்டலை விற்று வழிகேட்டை வாங்கிக் கொண்டவர்கள், இத்தகைய வணிகம் ஒரு போதும் வளம் தராது. அன்றியும் எந்த வழிகாட்டலையும் அவர்கள் பெறுவதில்லை.
[2:18] செவிடர், ஊமையர் மற்றும் குருடர்; அவர்கள் திரும்புவதற்குத் தவறிவிடுகின்றனர்.