குர்ஆன் 2:170 — பசுங்கன்று
“கடவுள் இதில் வெளிப்படுத்தியுள்ளதை பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப் பட்டால், அவர்கள், “எங்களுடைய பெற்றோர் எதனைச் செய்ய நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுகின்றோம்” என்று கூறுகின்றார்கள். என்ன அவர்களுடைய பெற்றோர் விளங்காதவர்களாகவும் வழி காட்டப்படாதவர்களாக இருந்தாலுமா?
[2:169] அவன் உங்களை பாவம் மற்றும் மானக்கேட்டை செய்யும்படியும் மேலும் கடவுள்-ஐப் பற்றி நீங்கள் அறியாதவற்றைக் கூறும்படியும் மட்டுமே கட்டளையிடுகின்றான்.
[2:171] இத்தகைய நம்ப மறுப்பவர்களின் உதாரணம், தாங்கள் செவியுறும் சப்தங்கள் மற்றும் அழைப்புக்களைப் புரிந்து கொள்ளாமலே திரும்பத் திரும்பக் கூறும் கிளிகளுக்கு ஒப்பாகும். செவிடர், ஊமையர், மற்றும் குருடர், அவர்களால் புரிந்து கொள்ள இயலாது.