குர்ஆன் 2:171 — பசுங்கன்று
இத்தகைய நம்ப மறுப்பவர்களின் உதாரணம், தாங்கள் செவியுறும் சப்தங்கள் மற்றும் அழைப்புக்களைப் புரிந்து கொள்ளாமலே திரும்பத் திரும்பக் கூறும் கிளிகளுக்கு ஒப்பாகும். செவிடர், ஊமையர், மற்றும் குருடர், அவர்களால் புரிந்து கொள்ள இயலாது.
[2:170] “கடவுள் இதில் வெளிப்படுத்தியுள்ளதை பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப் பட்டால், அவர்கள், “எங்களுடைய பெற்றோர் எதனைச் செய்ய நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுகின்றோம்” என்று கூறுகின்றார்கள். என்ன அவர்களுடைய பெற்றோர் விளங்காதவர்களாகவும் வழி காட்டப்படாதவர்களாக இருந்தாலுமா?
[2:172] நம்பிக்கை கொண்டோரே, நாம் உங்களுக்கு அளித்துள்ள நல்ல பொருட்களில் இருந்து உண்ணுங்கள், இன்னும் அவரை மட்டுமே நீங்கள் வழிபடுவீர்களானால், கடவுள்-க்கு நன்றியுடன் இருங்கள்.