குர்ஆன் 2:172 — பசுங்கன்று
நம்பிக்கை கொண்டோரே, நாம் உங்களுக்கு அளித்துள்ள நல்ல பொருட்களில் இருந்து உண்ணுங்கள், இன்னும் அவரை மட்டுமே நீங்கள் வழிபடுவீர்களானால், கடவுள்-க்கு நன்றியுடன் இருங்கள்.
[2:171] இத்தகைய நம்ப மறுப்பவர்களின் உதாரணம், தாங்கள் செவியுறும் சப்தங்கள் மற்றும் அழைப்புக்களைப் புரிந்து கொள்ளாமலே திரும்பத் திரும்பக் கூறும் கிளிகளுக்கு ஒப்பாகும். செவிடர், ஊமையர், மற்றும் குருடர், அவர்களால் புரிந்து கொள்ள இயலாது.
[2:173] நீங்கள் உண்ணுவதற்கு (மனிதக்குறுக்கீடின்றி) தாமாகவே செத்த பிராணிகளை, இரத்தத்தை, பன்றிகளின் இறைச்சியை, மேலும் கடவுள் அன்றி மற்றவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பிராணிகளை மட்டுமே அவர் தடை செய்கின் றார். பாவநோக்கிலோ, அல்லது வேண்டு மென்றோ இல்லாமல் (இவற்றை உண்ண) ஒருவர் நிர்பந்திக்கப்பட்டால், அவர் எந்தப்பாவத் திற்கும் உள்ளாவதில்லை. கடவுள் மன்னிப் பவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்.