குர்ஆன் 2:19 — பசுங்கன்று
மற்றொரு உதாரணம்: வானத்திலிருந்து இருள், இடி, மற்றும் மின்னலைக் கொண்டதொரு புயல் மழை. மரணத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கு அவர்கள் தங்கள் காதுகளுக்குள் தங்கள் விரல்களை வைத்துக் கொள்கின்றனர். கடவுள் நம்பமறுப்பவர்களை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
[2:18] செவிடர், ஊமையர் மற்றும் குருடர்; அவர்கள் திரும்புவதற்குத் தவறிவிடுகின்றனர்.
[2:20] மின்னலானது கிட்டத்தட்ட அவர்களுடைய கண் பார்வையைப் பறிக்கின்றது. அவர்களுக்காக அது ஒளிரும் போது, அவர்கள் முன்னோக்கி நகர்கின்றார்கள், மேலும் அது இருளாக மாறும்பொழுது, அவர்கள் அசையாமல் நின்று விடுகின்றார்கள். கடவுள் நாடினால், அவர் களுடைய கேட்கும் திறனையும், மேலும் அவர்களுடைய கண்பார்வையையும் எடுத்துவிட அவரால்* இயலும். கடவுள் சர்வ சக்தியுடையவர்.