Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:20 — பசுங்கன்று

மின்னலானது கிட்டத்தட்ட அவர்களுடைய கண் பார்வையைப் பறிக்கின்றது. அவர்களுக்காக அது ஒளிரும் போது, அவர்கள் முன்னோக்கி நகர்கின்றார்கள், மேலும் அது இருளாக மாறும்பொழுது, அவர்கள் அசையாமல் நின்று விடுகின்றார்கள். கடவுள் நாடினால், அவர் களுடைய கேட்கும் திறனையும், மேலும் அவர்களுடைய கண்பார்வையையும் எடுத்துவிட அவரால்* இயலும். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

[2:19] மற்றொரு உதாரணம்: வானத்திலிருந்து இருள், இடி, மற்றும் மின்னலைக் கொண்டதொரு புயல் மழை. மரணத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கு அவர்கள் தங்கள் காதுகளுக்குள் தங்கள் விரல்களை வைத்துக் கொள்கின்றனர். கடவுள் நம்பமறுப்பவர்களை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

[2:21] மனிதர்களே, நீங்கள் காப்பாற்றப்படும் பொருட்டு -உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர் களையும் படைத்தவராகிய - உங்கள் இரட்சகர் ஒருவரை மட்டுமே வழிபடுங்கள்.