குர்ஆன் 2:207 — பசுங்கன்று
இன்னும் கடவுள்-க்கு சேவை செய்வதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களும் உள்ளார்கள். இத்தகைய வணக்கசாலிகளின் மீது கடவுள் இரக்கமுடையவராக இருக் கின்றார்.
[2:206] கடவுள்-ஐ கவனத்தில் கொள் என்று அவனிடம் கூறப்பட்டால், கர்வத்துடன் கோபம் கொள்கின்றான். அதன் விளைவாக அவனுக் குரிய ஒரே விதி நரகமே; என்ன ஒரு துன்பகரமான வசிப்பிடம்.
[2:208] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் முழுமை யான அடிபணிதலை தழுவிக்கொள்ள வேண்டும். சாத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். ஏனெனில் அவன் உங்களுடைய மிகக் கடுமையான விரோதியாவான்.