குர்ஆன் 2:208 — பசுங்கன்று
நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் முழுமை யான அடிபணிதலை தழுவிக்கொள்ள வேண்டும். சாத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். ஏனெனில் அவன் உங்களுடைய மிகக் கடுமையான விரோதியாவான்.
[2:207] இன்னும் கடவுள்-க்கு சேவை செய்வதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களும் உள்ளார்கள். இத்தகைய வணக்கசாலிகளின் மீது கடவுள் இரக்கமுடையவராக இருக் கின்றார்.
[2:209] தெளிவான சான்றுகள் உங்களிடம் வந்ததன் பின்னர், உங்கள் மார்க்கத்தை விட்டு நீங்கள் திரும்பி விட்டால் அறிந்து கொள்ளுங்கள் கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.