குர்ஆன் 2:209 — பசுங்கன்று
தெளிவான சான்றுகள் உங்களிடம் வந்ததன் பின்னர், உங்கள் மார்க்கத்தை விட்டு நீங்கள் திரும்பி விட்டால் அறிந்து கொள்ளுங்கள் கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[2:208] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் முழுமை யான அடிபணிதலை தழுவிக்கொள்ள வேண்டும். சாத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். ஏனெனில் அவன் உங்களுடைய மிகக் கடுமையான விரோதியாவான்.
[2:210] அடர்ந்த மேகங்களுக்குள் இருந்து வானவர் கள் புடை சூழ கடவுள் வரும் வரை அவர்கள் காத்திருக்கின்றார்களா? இது நிகழும் போது சகல காரியமும் முடிந்திருக்கும். மேலும் அனைத்தும் கடவுள்-இடம் திரும்பக் கொண்டு வரப்படும்.*