Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:22 — பசுங்கன்று

அவர்தான் பூமியை உங்களுக்கு வசிக்கத் தக்கதாகவும், மேலும் வானத்தை ஒரு விதானமாகவும் ஆக்கியவர். உங்களுடைய வாழ்வாதாரங்களுக்காக அனைத்துக் கனிவகைகளையும் விளைவிப்பதற்கு, அவர் வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்பு கின்றார்.இப்போது நீங்கள் அறிந்திருப்பதால், கடவுள்-க்குப் போட்டியாக இணைத்தெய்வங்களை அமைத்துக்கொள்ளவேண்டாம்.

[2:21] மனிதர்களே, நீங்கள் காப்பாற்றப்படும் பொருட்டு -உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர் களையும் படைத்தவராகிய - உங்கள் இரட்சகர் ஒருவரை மட்டுமே வழிபடுங்கள்.

[2:23] நம்முடைய அடியாருக்கு* நாம் வெளிப்படுத் தியவற்றைக் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்குமேயானால், நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால், பின்னர் இவற்றைப் போன்ற ஒரு சூராவை உருவாக்குங்கள், மேலும் கடவுள்-க்கு எதிராக உங்கள் சொந்த சாட்சிகளை அழைத்துக் கொள்ளுங்கள்.