குர்ஆன் 2:23 — பசுங்கன்று
நம்முடைய அடியாருக்கு* நாம் வெளிப்படுத் தியவற்றைக் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்குமேயானால், நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால், பின்னர் இவற்றைப் போன்ற ஒரு சூராவை உருவாக்குங்கள், மேலும் கடவுள்-க்கு எதிராக உங்கள் சொந்த சாட்சிகளை அழைத்துக் கொள்ளுங்கள்.
[2:22] அவர்தான் பூமியை உங்களுக்கு வசிக்கத் தக்கதாகவும், மேலும் வானத்தை ஒரு விதானமாகவும் ஆக்கியவர். உங்களுடைய வாழ்வாதாரங்களுக்காக அனைத்துக் கனிவகைகளையும் விளைவிப்பதற்கு, அவர் வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்பு கின்றார்.இப்போது நீங்கள் அறிந்திருப்பதால், கடவுள்-க்குப் போட்டியாக இணைத்தெய்வங்களை அமைத்துக்கொள்ளவேண்டாம்.
[2:24] உங்களால் இதனைச் செய்ய இயலாது போனால் - மேலும் உங்களால் ஒரு போதும் இதனைச் செய்ய இயலாது - பின்னர் மனிதர்கள் மற்றும் கற்பாறைகளை எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பைப் பற்றி எச்சரிக்கையுடன் இருங்கள்; அது நம்ப மறுப்பவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக் கின்றது.