குர்ஆன் 2:24 — பசுங்கன்று
உங்களால் இதனைச் செய்ய இயலாது போனால் - மேலும் உங்களால் ஒரு போதும் இதனைச் செய்ய இயலாது - பின்னர் மனிதர்கள் மற்றும் கற்பாறைகளை எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பைப் பற்றி எச்சரிக்கையுடன் இருங்கள்; அது நம்ப மறுப்பவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக் கின்றது.
[2:23] நம்முடைய அடியாருக்கு* நாம் வெளிப்படுத் தியவற்றைக் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்குமேயானால், நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால், பின்னர் இவற்றைப் போன்ற ஒரு சூராவை உருவாக்குங்கள், மேலும் கடவுள்-க்கு எதிராக உங்கள் சொந்த சாட்சிகளை அழைத்துக் கொள்ளுங்கள்.
[2:25] நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, அவர்கள் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களைப் பெறுவார்கள் என்று நற்செய்தி அளிப்பீராக. அங்கு கனிகளைக் கொண்டு உணவு வழங்கப்படும்பொழுது “இதுதான் இதற்கு முன்னரும் எங்களுக்கு வழங்கப்பட்டது” என்று அவர்கள் கூறுவார்கள். இவ்விதமாக அவர்களுக்கு உதாரண-வர்ணனைகள் வழங்கப்படுகின்றன. அங்கே அவர்கள் தூய்மையான துணைகளைப் பெற்றிருப்பார்கள், மேலும் அவர்கள் அங்கே என்றென்றும் வசித்திருப்பார்கள்.