குர்ஆன் 2:25 — பசுங்கன்று
நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, அவர்கள் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களைப் பெறுவார்கள் என்று நற்செய்தி அளிப்பீராக. அங்கு கனிகளைக் கொண்டு உணவு வழங்கப்படும்பொழுது “இதுதான் இதற்கு முன்னரும் எங்களுக்கு வழங்கப்பட்டது” என்று அவர்கள் கூறுவார்கள். இவ்விதமாக அவர்களுக்கு உதாரண-வர்ணனைகள் வழங்கப்படுகின்றன. அங்கே அவர்கள் தூய்மையான துணைகளைப் பெற்றிருப்பார்கள், மேலும் அவர்கள் அங்கே என்றென்றும் வசித்திருப்பார்கள்.
[2:24] உங்களால் இதனைச் செய்ய இயலாது போனால் - மேலும் உங்களால் ஒரு போதும் இதனைச் செய்ய இயலாது - பின்னர் மனிதர்கள் மற்றும் கற்பாறைகளை எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பைப் பற்றி எச்சரிக்கையுடன் இருங்கள்; அது நம்ப மறுப்பவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக் கின்றது.
[2:26] மிகச் சிறிய கொசு முதல் அதைவிடப் பெரியதான எந்த விதமான உதாரணத்தை* எடுத்துக் கூறுவதிலிருந்தும் கடவுள் வெட்கப் படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை, இது தங்களுடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் என்பதை அவர்கள் அறிவார்கள், நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை அவர்கள் “இத்தகையதொரு உதாரணத்தைக் கொண்டு கடவுள் கூற நாடுவது என்ன? என்று கூறுகின்றார்கள். அதன் மூலமாக அவர் பலரை வழிதவறச் செய்கின்றார், மேலும் பலரை வழிநடத்துகின்றார். ஆனால் அதன் மூலமாக தீயவர்களைத்தவிர எவரையும் அவர் ஒருபோதும் வழிதவறும்படி செய்வதில்லை,