குர்ஆன் 2:230 — பசுங்கன்று
அவன், அவளை (மூன்றாவது முறை) விவாகரத்து செய்து விட்டால், அவள் வேறு ஒருவனை மணந்து அதன் பிறகு, அவன் அவளை விவாகரத்து செய்யாத நிலையில், இவன் அவளை மறுமணம் செய்து கொள்வது சட்ட விரோதமாகும்., அவர்கள் கடவுள்-ன் சட்டங்களை கடைப்பிடித்த நிலையில் முதல் கணவன் மீண்டும் அவளை மறுமணம் செய்து கொள்ள இயலும். இவை கடவுள்-ன் சட்டங்கள், அறியக் கூடிய மக்களுக்கு அவர் இவற்றை விவரிக்கின்றார்.
[2:229] விவாகரத்து இருமுறை திரும்ப பெற்றுக் கொள்ளப்படலாம். விவாகரத்து செய்யப்பட்ட பெண் அதே வீட்டில் இணக்கமாக வாழவோ அல்லது இணக்கமாக வெளியேறவோ அனுமதிக்கப்பட வேண்டும். கணவன் அவளுக்கு கொடுத்த எதையும் திருப்பி எடுத்துக் கொள்வது சட்ட விரோதமானது. இருப்பினும் தம்பதியினர், தாங்கள் கடவுள்-ன் சட்டங்களை மீறி விடக்கூடும் என்று அஞ்சக்கூடும். அவர்கள் கடவுள்-ன் சட்டங்களை மீறக்கூடும் என்ற அச்சமிருப்பின் மனைவி தன் விருப்பத்துடன், தான் தேர்ந்தெடுத்த எதையும் திரும்பக் கொடுத்தால் அவர்கள் எந்த தவறும் செய்தவர்கள் ஆக மாட்டார்கள். இவை கடவுள்-ன் சட்டங்கள்; இவற்றை மீற வேண்டாம். எவர்கள் கடவுள்-ன் சட்டங் களை மீறுகின்றார்களோ அவர்கள் நேர்மை யற்றவர்களே.
[2:231] நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து விட்டால் அவர்கள், அவர்களுடைய தவணைக் காலத்தை (மூன்று மாதவிடாய் காலம்) நிறைவு செய்தவுடன் அவர்களை இணக்கமாக அதே வீட்டில் வாழவோ அல்லது அவர்களை இணக்க மாக வெளியேறவோ நீங்கள் அனுமதிக்க வேண்டும். பழிவாங்கு வதற்காக அவர்களை அவர்கள் விருப்பத்திற்கு எதிராக தங்கி இருக்கும்படி நிர்ப்பந்திக்காதீர்கள். எவர் ஒருவர் இதைச் செய்கின்றாரோ அவர் தன் சொந்த ஆன்மாவிற்கு தவறிழைக்கின்றார். கடவுள்-உடைய வெளிப்பாடுகளை வீணாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது கடவுள்-உடைய அருட்கொடைகளையும் மேலும் உங்களுக்கு அறிவூட்டுவதற்காக வேதத்தையும் ஞானத் தையும் இறக்கி அனுப்பியதையும் நினைவு கூருங்கள். நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் கடவுள் எல்லாவற் றையும் தெரிந்தவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.