குர்ஆன் 2:229 — பசுங்கன்று
விவாகரத்து இருமுறை திரும்ப பெற்றுக் கொள்ளப்படலாம். விவாகரத்து செய்யப்பட்ட பெண் அதே வீட்டில் இணக்கமாக வாழவோ அல்லது இணக்கமாக வெளியேறவோ அனுமதிக்கப்பட வேண்டும். கணவன் அவளுக்கு கொடுத்த எதையும் திருப்பி எடுத்துக் கொள்வது சட்ட விரோதமானது. இருப்பினும் தம்பதியினர், தாங்கள் கடவுள்-ன் சட்டங்களை மீறி விடக்கூடும் என்று அஞ்சக்கூடும். அவர்கள் கடவுள்-ன் சட்டங்களை மீறக்கூடும் என்ற அச்சமிருப்பின் மனைவி தன் விருப்பத்துடன், தான் தேர்ந்தெடுத்த எதையும் திரும்பக் கொடுத்தால் அவர்கள் எந்த தவறும் செய்தவர்கள் ஆக மாட்டார்கள். இவை கடவுள்-ன் சட்டங்கள்; இவற்றை மீற வேண்டாம். எவர்கள் கடவுள்-ன் சட்டங் களை மீறுகின்றார்களோ அவர்கள் நேர்மை யற்றவர்களே.
[2:228] விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள்(வேறொரு ஆணை திருமணம் செய்வதற்கு முன்) மூன்று மாதவிடாய் காலங்கள் காத்திருக்க வேண்டும். அவர்கள் கடவுள் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களானால், அவர்களின் கருவறைகளில் கடவுள் படைத்திருப்பதை மறைப்பது சட்ட விரோதமானது. (கர்ப்பம் தரித் திருந்தால்), கணவன் அவளை மறுமணம் செய்ய விரும்பினால் மனைவியின் விருப்பத்தை விட கணவனின் விருப்பமே மேலாக இருக்க வேண்டும். நியாயமான உரிமைகளும் அதே நேரம் கடமைகளும், பெண்களுக்கு உண்டு. இவ்விதமாக, ஆணின் விருப்பங்களே (கர்ப்பம் தரித்திருந்தால்) மேலோங்கி நிற்கும். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[2:230] அவன், அவளை (மூன்றாவது முறை) விவாகரத்து செய்து விட்டால், அவள் வேறு ஒருவனை மணந்து அதன் பிறகு, அவன் அவளை விவாகரத்து செய்யாத நிலையில், இவன் அவளை மறுமணம் செய்து கொள்வது சட்ட விரோதமாகும்., அவர்கள் கடவுள்-ன் சட்டங்களை கடைப்பிடித்த நிலையில் முதல் கணவன் மீண்டும் அவளை மறுமணம் செய்து கொள்ள இயலும். இவை கடவுள்-ன் சட்டங்கள், அறியக் கூடிய மக்களுக்கு அவர் இவற்றை விவரிக்கின்றார்.