Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:231 — பசுங்கன்று

நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து விட்டால் அவர்கள், அவர்களுடைய தவணைக் காலத்தை (மூன்று மாதவிடாய் காலம்) நிறைவு செய்தவுடன் அவர்களை இணக்கமாக அதே வீட்டில் வாழவோ அல்லது அவர்களை இணக்க மாக வெளியேறவோ நீங்கள் அனுமதிக்க வேண்டும். பழிவாங்கு வதற்காக அவர்களை அவர்கள் விருப்பத்திற்கு எதிராக தங்கி இருக்கும்படி நிர்ப்பந்திக்காதீர்கள். எவர் ஒருவர் இதைச் செய்கின்றாரோ அவர் தன் சொந்த ஆன்மாவிற்கு தவறிழைக்கின்றார். கடவுள்-உடைய வெளிப்பாடுகளை வீணாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது கடவுள்-உடைய அருட்கொடைகளையும் மேலும் உங்களுக்கு அறிவூட்டுவதற்காக வேதத்தையும் ஞானத் தையும் இறக்கி அனுப்பியதையும் நினைவு கூருங்கள். நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் கடவுள் எல்லாவற் றையும் தெரிந்தவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

[2:230] அவன், அவளை (மூன்றாவது முறை) விவாகரத்து செய்து விட்டால், அவள் வேறு ஒருவனை மணந்து அதன் பிறகு, அவன் அவளை விவாகரத்து செய்யாத நிலையில், இவன் அவளை மறுமணம் செய்து கொள்வது சட்ட விரோதமாகும்., அவர்கள் கடவுள்-ன் சட்டங்களை கடைப்பிடித்த நிலையில் முதல் கணவன் மீண்டும் அவளை மறுமணம் செய்து கொள்ள இயலும். இவை கடவுள்-ன் சட்டங்கள், அறியக் கூடிய மக்களுக்கு அவர் இவற்றை விவரிக்கின்றார்.

[2:232] நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து விட்டால், அவர்கள் அவர்களுடைய தவணைக் காலத்தை நிறைவு செய்தவுடன், அவர்கள் ஒருவருக்கொருவர் சமாதானமாகி இணங்கினால் தங்கள் கணவர்களை அவர்கள் மீண்டும் திருமணம் செய்வதை தடுக்க வேண்டாம். உங்களில் யார் கடவுள்-ஐயும், இறுதி நாளையும் நம்புகின்றார் களோ அவர்களே இதைக் கவனத்தில் கொள்வார்கள். இது உங்களுக்கு தூய்மையானதும், மிகவும் நன்னெறியானதுமாகும். நீங்கள் அறியாத பொழுதும் கடவுள் அறிவார்.