குர்ஆன் 2:232 — பசுங்கன்று
நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து விட்டால், அவர்கள் அவர்களுடைய தவணைக் காலத்தை நிறைவு செய்தவுடன், அவர்கள் ஒருவருக்கொருவர் சமாதானமாகி இணங்கினால் தங்கள் கணவர்களை அவர்கள் மீண்டும் திருமணம் செய்வதை தடுக்க வேண்டாம். உங்களில் யார் கடவுள்-ஐயும், இறுதி நாளையும் நம்புகின்றார் களோ அவர்களே இதைக் கவனத்தில் கொள்வார்கள். இது உங்களுக்கு தூய்மையானதும், மிகவும் நன்னெறியானதுமாகும். நீங்கள் அறியாத பொழுதும் கடவுள் அறிவார்.
[2:231] நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து விட்டால் அவர்கள், அவர்களுடைய தவணைக் காலத்தை (மூன்று மாதவிடாய் காலம்) நிறைவு செய்தவுடன் அவர்களை இணக்கமாக அதே வீட்டில் வாழவோ அல்லது அவர்களை இணக்க மாக வெளியேறவோ நீங்கள் அனுமதிக்க வேண்டும். பழிவாங்கு வதற்காக அவர்களை அவர்கள் விருப்பத்திற்கு எதிராக தங்கி இருக்கும்படி நிர்ப்பந்திக்காதீர்கள். எவர் ஒருவர் இதைச் செய்கின்றாரோ அவர் தன் சொந்த ஆன்மாவிற்கு தவறிழைக்கின்றார். கடவுள்-உடைய வெளிப்பாடுகளை வீணாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது கடவுள்-உடைய அருட்கொடைகளையும் மேலும் உங்களுக்கு அறிவூட்டுவதற்காக வேதத்தையும் ஞானத் தையும் இறக்கி அனுப்பியதையும் நினைவு கூருங்கள். நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் கடவுள் எல்லாவற் றையும் தெரிந்தவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
[2:233] விவாகரத்து செய்யப்பட்ட தாய்மார்கள் குழந்தை களுக்கு அவர்களின் தந்தை விரும்பினால் இரண்டு முழு வருடங்கள் பாலூட்ட வேண்டும். தந்தை அந்த தாய்க்கு உணவும், உடையும் நியாயமான முறையில் வழங்க வேண்டும். எவர் மீதும் அவர் சக்திக்கு மீறிய சுமையை சுமத்தக் கூடாது. குழந்தையின் காரணமாக தாய் துன்புறுத்தப்படக்கூடாது, அவ்வாறே குழந்தையின் காரணமாக தந்தை துன்புறுத்தப்படக்கூடாது. (தந்தை இறந்து விட்டால்) அவருடைய வாரிசுதாரர் இந்தப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். நன்கு கலந்தாலோசித்த பின்னர் குழந்தையின் பெற்றோர் ஒருவருக்கொருவர் பிரிந்து விட ஒப்புக் கொண்டு அவ்வாறு செய்வதால் அவர்கள் தவறு செய்தவர்களாக மாட்டார்கள். நீங்கள் நியாயமானதை கொடுத்து பாலூட்டும் செவிலித் தாயாரை வாடகைக்கு அமர்த்திக் கொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள் மேலும் கடவுள் நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் பார்ப்பவராக இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.